மாதிரி தேசிய அடைவு ஆய்வு - பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி தேசிய அடைவு ஆய்வு - பத்தாம் வகுப்பு - தமிழ்
தேசிய அடைவு ஆய்வு - 2021
மாணவர்கள் இந்த மாதிரி தேசிய அடைவு ஆய்வு தேர்வானது 12-11-2021 தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை வாசித்து நன்கு சிந்தித்து பின் விடையளிக்கவும். இந்த 15 வினாக்கள் தேர்வு எழுத மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. முயற்சி.பயிற்சி,வெற்றி.
தென்றல் காற்று, புயல், காற்று, சூறாவளிக் காற்று என்று காற்றின் பல்வேறு பெயர்களுக்குக் காரணமாக அமைவது காற்றின்------------------------------ ஆகும்.
அ) வெப்பம்
ஆ) வேகம்
இ) திசை
ஈ) சுழற்சி
கீழ்க்கண்ட காற்றில் மழைக்காற்று எது?
அ) கொண்டல்
ஆ) தென்றல்
இ) கோடை
ஈ) வாடை
’ வளிதொழில் ஆண்ட உரவோன் மருக’ எனப் புகழப்படுபவன் யார்?
அ) இராசராசன்
ஆ) இராசேந்திரன்
இ) குலோத்துங்கன்
ஈ) கரிகாலன்
முசிறி துறைமுகத்தின் வணிகத்திற்கு உதவிய காற்று---------------------------- ஆகும்.
அ) தென்றல் காற்று
ஆ) பருவக் காற்று
இ) வாடைக்காற்று
ஈ) கோடைக்காற்று
இந்தியாவின் மழைப்பொழிவில் --------------சதவீதம் தென்மேற்குப் பருவக் காற்றால் கிடைக்கிறது.
அ) 50
ஆ) 80
இ) 70
ஈ) 90
இலக்கியங்களில் காற்று- பற்றிய கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது?