ஒன்பதாம் வகுப்பு
QUIZ - இயல் 1-8
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது ஒருமதிப்பெண் வினாக்களுக்கான பயிற்சி அளிப்பதற்காக இப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. இயல்வாரியாக ஒருமதிப்பெண் வினாக்கள் GOOGLE FORM ல் வழங்கப்பட உள்ளது. கணினி அல்லது கைப்பேசியில் இதனைப் பயன்படுத்திக் கற்பது எளிது. மேலும் மாணவர்களிடையே மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கும். மேலும் தற்போது அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதால் GOOGLE FORM மூலம் இதனை ஒரு வினாடி - வினாவாகவும் அமைக்க இயலும். இது மாணவர்களிடயே உற்சாகத்தை ஏற்படுத்தும். வழக்கமான வகுப்பறைச் சூழலில் இருந்து வெளியே வந்து புதுமையான முறையில் கற்பதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அதன் அடிப்படையில் ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனியே பயிற்சித்தாள் கொடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் PDF வடிவில் மாற்றி கீழே கொடுத்துள்ளேன். இவற்றைப் பதிவிறக்கம் செய்து, எழுத்துத் தேர்வுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் இந்த இணைப்பை ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
QUIZ - இயல் 8
Tags:
QUIZ