குழம்பு வகைகள் மற்றும் பொரியல் வகைகள்

 குழம்பு வகைகள் மற்றும் பொரியல் வகைகள்


    பணிக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று என்ன சமைப்பது என்பதுதான். அவசரமாகக் கிளம்ப வேண்டும் என்பதால், ஏதோ ஒன்றைச் சமைத்து எடுத்துச் செல்கிறோம். இதனால் ஆரோக்கியக் குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும் உண்டாகிறது. அதிகமான ஆற்றலை இழக்க நேரிடும் பணி என்பதால், தேவையான உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. ஆனால் இருக்கும் அவசரத்தில் என்ன சமைப்பது என்று முடிவெடுக்க முடியாமல் போகிறது. உயிர் வாழ்வது என்பதைத் தாண்டி, நலமுடன் வாழ வேண்டும் என்பதைப் பலர் மறந்து போகின்றனர். காய்கறிகளின் விலிய மிக அதிகம், வேலைப்பளு அதிகம் என்று எண்ணி, காய்கறிகளியப் பெருமளவு தவிர்க்கிறோம். அதன் விளைவாக சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றோம். அதற்கான சிகிச்சை செலவு, மாத்திரை மருந்துகளுக்கான செலவு ஆகியவற்றைப் பார்க்கும்போது காய்கறிகளின் விலை குறைவு என்றே நான் எண்ணுகிறேன். நம்முடைய குடும்பம் நம்மைச் சார்ந்து இருக்கிறது என்வே நம்முடைய ஆரோக்கியம் மிக முக்கியம். அதனைக் காக்க வேண்டும் எனில் உண்ணும் உணவு மிக அவசியம். 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.
                                                    என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நல்ல உணவே நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம். 
சமையலறையில் செலவிடும் நேரம் நம்முடைய ஆரோக்கியத்திற்காகச் செலவிடும் நேரம் என்பார் மருத்துவர். கு. சிவராமன். அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள். மருத்துவமனையில் காத்திருப்பதை விடச் சமியலறையில் காத்திருப்பது நல்லதல்லவா?

இதை மனத்தில் வைத்தே இந்த குழம்பு வகைகள் மற்றும் பொரியல் வகைகள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் நாளை என்ன சமைப்பது என்று இரவே முடிவெடுக்க முடியும். அதனால் காலை நேரப் பரபரப்புக் குறையும். அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களுக்கும் இந்த இணைப்பை அனுப்புங்கள்.
                    
                                                                                                        To download
    

Post a Comment

Previous Post Next Post