10TH - TAMIL - மொழிப்பயிற்சி - இயல் 5

                                                                    பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி - இயல் 5



        பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இயல் 5- ல் உள்ள மொழிப்பயிற்சி கீழே கொடுக்கப் பட்டுள்ளது. PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி

பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி – இயல் 5

ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1.  Lute music                      -  யாழிசை          

2. Chamber                          - அறை

3. To look up                        - எட்டிப் பார்த்தல்             

4. Grand – daughter            பெயர்த்தி

5.  Rote                                  - நெட்டுரு

6. Didactic compilation        -  நீதிநூல் திரட்டு

 தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

    நாட்டு மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

2.வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

    செம்மையான வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

3.கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

    சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

4.குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.

    சிறுகுழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

தொழிற்பெயர்களில் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களிய முழுமை செய்க.

1.நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல்  யாவும் அரசுக்கே சொந்தம்.

    நெகிழிப் பொருள்களைப் புதைத்தல் நிலத்தடி நீர்மட்டத்தைக் குன்றச் செய்யும்.

2. காட்டு விலங்குகளைச்  சுடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

    செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த  உதவுகிறது.

3. காற்றின் மெல்லிய தொடுதல்  பூக்களைத் தலையாட்ட வைக்கிறது.

    கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது.

4. பசுமையான காட்சி ஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது.

5. பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பு இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது

அகராதியில் காண்க :

        1.        மன்றல்               -  நறுமணம், திருமணம்

        2.      அடிச்சுவடு        -  கால் தடம்

        3.      அகராதி              -  அகர முதலி

        4.      தூவல்                 -  எழுதுகோல்

        5.      மருள்                  -  மயக்கம்

கலைச்சொல் அறிவோம்  :

        1.        Emblem             -  சின்னம்

        2.      Intellectual          -  அறிவாளர்

        3.      Thesis                 -  ஆய்வேடு

        4.      Symbolism         -  குறியீட்டியல்

                                                                                                                                        To downoad, click here


Post a Comment

Previous Post Next Post