8th - TAMIL- ALL WORK SHEETS - புத்தாக்கப்பயிற்சி - PDF

  எட்டாம் வகுப்பு  

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

மாணவர் மதிப்பீட்டுச் செயல்பாடுகளின் தொகுப்பு



அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அரசு வழங்கியுள்ள எட்டாம் வகுப்புப் புத்தாக்கப் பயிற்சிக்கான புத்தகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டுக்கான பணித்தாள்கள் ஒவ்வொரு திறனுக்கும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன. கடந்த வகுப்புகளில் மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன்களை மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அவை வழங்கப்பட்டுள்ளன.  இத்திறன்களில் பயிற்சியளிப்பது மிக அவசியம் ஆகையால், அவற்றிற்கான கட்டகம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திறனிலும் பயிற்சி முடிந்தவுடன், மாணவர்களுக்கான மதிப்பீட்டுப் பயிற்சிச் செயல்பாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. முழு கட்டகத்தையும் ஒவ்வொரு மாணவருக்கும் பிரதி எடுத்துக் கொடுப்பது மிகுந்த பொருள் செலவை ஏற்படுத்தும். மாணவர் மதிப்பீட்டுச் செயல்பாடுகள் பயிற்சிகளோடு தொடர்ச்சியாக இருப்பதால் அவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்தினால் அதிக பக்கங்கள் தேவைப்படும். எனவே மாணவர்களுக்கான மதிப்பீட்டுச் செயல்பாடுகளை மட்டும் தனியே பிரித்து, அவைகளை ஒரு தாளுக்கு நான்கு பக்கங்களாகப் படியெடுக்கும் வகையில் இந்தப் பயிற்சித்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் படியெடுத்துக் கொடுப்பது மிக எளிது. மற்றும் செலவும் மிகக்குறைவு. ஒரு தாளுக்கு 1 ரூபாய் என எடுத்தால் 10 தாள்களுக்குப் பத்து ரூபாய் மட்டுமே ஆகும். ஒரு மாணவருக்குப் பத்து ரூபாய் என்ற அளவில் இந்த மதிப்பீட்டுப் பயிற்சித்தாளை நாம் படியெடுக்க முடியும். இதனால் மாணவர்களே இந்த மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் படியெடுத்துக் கொள்ள முடியும். ஆசிரியர்கள் தருவதாக இருந்தாலும் செலவு பெருமளவு குறையும். மிகுந்த முயற்சிகளோடு இது உருவாக்கப்பட்டுள்ளதால், பதிவிற்ககம் செய்ததை நண்பர்களுக்கு அனுப்பாமல், இந்த பக்கத்திற்கான இணைப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும்.  இப்பணித் தாள்களைப் படியெடுத்து, மாணவர்களுக்கான பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!
                                                                                
  எட்டாம் வகுப்பு
 புத்தாக்கப் பயிற்சி

அனைத்துப் பயிற்சிகளுக்குமான மதிப்பீட்டுத்தாள்கள்

                                                                                                                                            TO DOWNLOAD, CLICK HERE



Post a Comment

Previous Post Next Post